பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைதல்ட 199 மில்லாத வளர்ச்சி. பரந்த முகம். தேவையே ஆன சிரிப்பு. எண்ணும் தோறும் உன்ளே. ஊறிக் கொண்டு வருகிறது, விவரிக்க முடியாத மனச் சபலம்." 'கார்த்தி படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். இவனா கார்த்தி: பாதத்தைத் தொடுகிறது. பின்னல். கேவலம் இந்த உபநடிகைக்கு நெற்றியில் அந்த குங்குமப் பொட்டு எவ்வளவு அழகாக ஜ்வ:விக்கிறது. எத்தனை பேர் அழிய அழிய இட்ட பொட்டோ? கண்ணும் பேசுகிறது. உதடும் பேசுகிறது. இதற்கெல்லாம் தானே அள்ளி அள்ளிக் கொடுக்கிருர்கள். மனக்க மணக்க அத்தர் பூசிக் கொண்டு வரும் செருக்குக்கும், வழிய வழிய வெற்றின் குழப்பிக் கொண்டு வரும் அழுமூஞ்சிக்கும், சிரிக்கச் சிரிக்க புகை ஊதிக் கொண்டு வரும் அலட்சியத்திற்கும் இந்த அழகு அர்ச்சித்து எறியப்படுகிறதே...து!’ (மோக பல்லவி) சொற்கள் உயிர் பெறும்படியான உணர்ச்சிச் சித்திரிப்பு என்பார்களே, அந்த ரகமான ஜீவசித்திரங்களை மாதவன் தனது கதைகளில் உருவாக்கியிருக்கிரு.ர். அதற்கு அவருடைய எளிய, இனிய உரை தடை துணேபுரிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை அவர் வர்ணிக்கிற விதம் இது. 'முப்பத்து ஐந்து வயது வரையில் அம்மா துணைபுடன் மட்டும் வாழும் ஒரு பெண். நான் எட்டிப் படர்ந்து கொள்ள எனக்கு எதுவும் தேவையில்லே. ஆளுல் தான் என் தேவைகளையும் வளர்ச்சிகளையும் உணர்கிறேன். இரவில் தனிமை எனக்கு குளிராக இருக்கிறது. உறக்கத்தில் கனவு எனக்குத் தீயாக இருக்கிறது. விழிப்பின் அர்த்தம் எனக்கு புதிராக இருக்கிறது. நடையின் அழுத்தம் எனக்கு மலையாக