பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo பாரதிக்குப் பின் ரயில் 'ழே’ என்று கூவிவிட்டு உபரி நீராவியைக் கக்கி விட்டுக் கிளம்பியது. அந்தப் பெண் ரயிலுடன் ஒடினள், தாக கொடுக்காத அந்தப் பிரயாணி அவள் கார்பு குலுங்க ஒடி வருவதை ரசித்துக் கொண்டே சில்லறையை விட் டெறிந்தான். அவள் காசைப் பொறுக்கிக் கொண்டு, வீதி எறிந்தவனே நோக்கி தத்’ என்று துப்பிள்ை." இது கஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ: நாவலின் ஆரம்பம். இந்த நாவல், வாரப் பத்திரிகையில் தொடர்கதை யாக வந்து கொண்டிருந்த போதும் சரி; புத்தகமாகப் பிரகரமாகி விற்பனைக்கு வந்த போதும் சரி-மிக அதிக மான வாசகர்களின் ரசிப்பையும் பாராட்டுதலையும் பெற்றது. - படித்தவர்கள் பலரும் சுஜாதாவின் கதை சொல்லும்" திறனையும், கதையில் எடுத்தாண்ட விஷயத்தையும், இதர பல நயங்களையும் ரசித்து வியந்து எடுத்துச் சொல்லி மகிழ்ந் தார்கன். சுஜாதாவின் கதைகளால் வசீகரிக்கப்பெற்ற ரசிகர்கள் அனைவரும் அவருடைய வசன நடையைப் பாராட்டிச் சொல்லவும் தவறவில்லை. சுஜாதா (எஸ். ரங்கராஜன்) ஜனரஞ்சகமான கதை களையே எழுதுகிருர். கொலை, கொள்ளை, கடத்தல் வேலை, மர்மம், துப்பறிதல், பெண் தொடர்பு, பெண் சாகசம் போன்ற விஷயங்களையே அதிகமாகக் கதைகளில் எடுத் தாள்கிரு.ர். விஞ்ஞான விஷயங்களையும் ஒரளவுக்குக் கலந்து கொடுக்கிரு.ர். அவருடைய கதாபாத்திரம் ஒன்று கதையின் நாயக னிடம் எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கிங்க' என்று ஒரு இடத்தில் குறிப்பிடுவதாக சுஜாதா எழுதியிருக்