பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 203 கிருர். அவருடைய எழுத்துகளைப் படிக்கிறவர்களும், "மிஸ்டர் சுஜாதா, நீங்கள் எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!" என்று வியப்புடன் கூற நேரலாம். எலெக்ட்ரானிக்ஸ், இசை, சித்த வைத்தியம், நாட்டுப் பாடல்கள்-இப்படிப் பலபல விஷயங்கள் பற்றியும் அவர் நிறையத் தெரிந்து வைத்திருக்கிருர்-மேலும் மேலும் நிறையத் தேடி அறிந்து கொண்டும் இருக்கிரும். வாசகர் களை இம்ப்ரஸ் பண்ணவேண்டும் என்பதற்காக அவற்தை அங்கங்கே கலந்து தருகிருர் என்றும் எண்ணத் தோன்று கிறது. சுஜாதாவின் உரைநடையில் எளிமையும் இனிமையும் சுவையும் நிறைய இருப்பது போலே புதுமையும் அதிகம் கலந்திருக்கிறது. நவீன விஷயங்கள் மிகுதியாகவே இடம் பெறுகின்றன. 'எந்தக் கதையையும் ஆரம்பிக்கிற போதே வாசகரிடம் ஒரு விறுவிறுப்பை, விழிப்பு உணர்லை, எதிர்பார்த்தலே ஏற்படுத்துகிறது அவர் எழுதும் உரைநடை. கரையெல்லாம் செண்பகப்பூ கிராமப்புறத்தைகிராமியவிஷயங்களை-அடிப்படையாகக் கொண்ட நாவல். மற்ருெரு மிக நாகரிகச் சூழ்நிலையைக் கொண்ட நவீன முறை நாவலின் ஆரம்பத்தைக் கவனிக்கலாம் டில்வி விமான திலேயம்-பாலம், இரவு: கணிக்கு ஒரு கோலாவை உறிஞ்சிக் கொண்டு காத்திருந்த தான் ஒரு மத்திய சர்க்கார் ஆசாமி, மத்திய சர்க்காரில் என் வேலை என்ன என்று உங்களுக்குச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். - எதிர்மறையில் சதிராடிக் கொஞ்சம் விளங்க வைக் கிறேன். -