பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை - 207 சில உதாரணங்கள் "அவள் முன்னே நடக்க, அவன் பின் தயங்கி நடத்தான். வயலில் பாய்ந்தாள். காலில் கொலுசு தெரிந்தது, வரப்பில் நடந்தாள். நீர் நிறைந்த வயலில் அவள் பிம்பம் அவளுடன் தலைகீழாக நடந்தது. எதிரே மாமரச் சோலையில் ஒரு பச்சை ரகசியம். அருகே பம்ப்செட் பாதி போல் நீரிறைத்துக் கொண்டிருந்தது. ப ைமரங்கள் வரப்புக் காவல் நின்றன : வான நீல நிறத்தில் அங்கங்கே பஞ்ச ஒத்தடங்கள் டிர்ரிக் டிர்ர்ரிக் என்றும் ச்பூச்யூ என்றும் பறவைக் குரல்கள். கறுப்பு வெல்வெட் குருவி ஒன்று வாலைத் தாக்கித் துரக்கி எழுப்பிய தொனித் துளிகள் எஃப் ஷார்ப்பில் இருந்ததாகப் பட்டது கல்யாணராமனுக்கு. அவன் மனத்தில் வயவின் கள் ஒலித்தன.” (கரையெல்லாம் செண்பகப்பூ) "நகரத்தில் சேட்டே அறியாத பட்சிகள் எல்ல, கல்யாணராமன்!” என்று அவ ன எழுப்பின. எழுந்தான் வேறு விதமாக இருந்தன காலை ரகசியங்கள் எல்லாம் பயங்கள் எல்லாம் இளஞ் சூரியனிடம் அடிப்பட்டுப் போய் விட்டன. ஜன்னல் வழியாக அந்தத் தங்கத் திகிரி உஷ்ண மில்லாமல் அவன் மேல் மஞ்சளடித்தது.” ேேழ அழுக்குப் பச்சைச் சதுரங்கள் மெதுவாக உருண்டு கொண்டிருந்தன. மேற்கே மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் தீட்டிய ஆரஞ்சுப் படுதா போல வானம்' (ஜேகே) அக்வாரிக்குச் சென்றிருந்த தாளின் லாரி திருக்பி வரும் போது மழை இங்கே பெய்வதில்லை என்று தீர்மானித்துத் தன் மின்னல் நெக்லஸ் அணிந்த கறுப்புத் தேவதைகளை அழைத்துக் கொண்டு கிழக்கே போய் விட்டது." வைரங்கள்)