பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 19 அார்த்தைகளையும் முடிவுகளையும் கன் டார்களோ இல்லையோ, உடனே அந்த வழக்கொழிந்த பாஷையை மன னம் பண்ண ஆரம்பித்து அதிலேயே எழுதவும் புகுந்துவிட் டார்கள். இந்த அரும்பத அகராதிக் கோவையைக் கண்டு தமிழ் மக்கள், தமிழ்ப் பண்டிதர்கள் கூட, அடடா! என்ன பாண்டித்யம்! என்ன பாண்டித்யம்!’ என்று வாய் திறந்த வண்ணமாக வியக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு “உயர்ந்த நடை வளர்ந்தோங்குவதற்குக் கேட்பானேன்? நச்சினர்க்கினியர், பரிமேலழகர், இறையனர் அகப்பொருள் உரை ஆசிரியர் எல்லாரும் பம்மிப்போளுர்கள்! நான் நேற்று இங்கு வந்தேன்’ என்று எழுதுவது போய் நெருநற் கங்குல் ஈண்டு யான் போந்தேன்’ என்று எழுதுவது வந்தது. கடைக்குப் போய் வேட்டி வாங்கி வந்தேன்’ என்று சொல்ல முடியாது: "கூலம் குறுகிக் கூறை கொணர்ந் தேன்’ என்றுதான் எழுத முடியும். ஆடு அல்ல, யாடுதான். ஆறு அல்ல, பாறுதான். மரம் அல்ல, மரன்தான். நான் என்பது கொச்சை. யான் என்பது அழகு வாய்ந்தது. ஆசிரியர்களே இந்தத் தாளத்தில் நடந்தார்கள் என்ருல் மாணவர்களுடைய நடையைப்பற்றிச் சொல்லவா வேண் டும்? எல்லாம் தாராக் கோழி சேற்றில் நடக்கிற தத்தக்கப் புத்தக்க நடையாக முடிந்தது. தமிழில் எழுதுவதும் பேசு வதும், பிறருக்கு விஷயத்தை விளங்கச் செய்வதற்காகத் தான் என்ற நோக்கம் போய், தாங்கள் மனனம் பண்ணின அரும்பத அகராதியைப் புரட்டிப் புரட்டிக் காட்டுகிற பகட்டுத் தொழிலாக மாறிவிட்டது.” (கல்கி'யின் கன யாழியின் கனவு முன்னுரையில்.) மற்றும் சிலரோ தங்கள் கருத்தைக் கவர்ந்த காவியம் அல்லது கவிதைகளே. திரும்பத் திரும்பப் படித்து ரசித்த தோடு நில்லாது அவற்றின் வரிகளையே தங்கள் வசனத்தில்