பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஈழத்தின் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மிகச் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிரு.ர்கள்; இப்போதும் நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் முதலிய பிரிவுகளில் அவர்கள் போற்றத் தகுந்த பணிபுரிந்துகொண் டிருக்கிரு.ர்கள். ஈழத்து எழுத்தாளர்களின் உரைநடை குறித்துத் தனியாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியம். இந்த வேலையை ஈழத்தின் எழுத்தாளர்களில் எவரேனும் செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தில் இருப்பவர்களால் இதை பூரணமாக, உரிய முறையில், செய்ய இயலாது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்வதற்குப் போதுமான வாய்ப்பும் வசதிகளும் இல்லை. ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் படைத்துள்ள நாவல்கள், குறுநாவல்கள் முதலியனவும், சிறுகதைத் தொகுப்புகளும் இதர புத்தகங்களும் தமிழ் நாட்டில் கிடைப்பதில்லை. தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி நான் எழுதி வருகிற இத்தொடரில் ஒரு வரையறை வகுத்துக் கொண்டிருப்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். தமிழ் உரைநடை வளர்ச்சியில் புதுமை சேர்த்தவர்கள், பிறர்மீது பாதிப்பு