பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பாரதிக்குப் பின் போலவே எழுத்து நடையிலும் புதுமைகள் பண்ண முயன்ருர். அவற்றை விரிவாக எடுத்துச் சொல்வதற்கு உதவக்கூடிய புத்தகங்கள் கிடைக்கவில்லை. பொன்னுத்துரையின் உரைநடையில் லா. ச. ராமா மிர்தத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதை, அவருடைய படைப்புகளை வாசிக்கும் ரசிகர்கள் எளிதில் உணர முடியும். 'காலம் காலமாகக் கவிஞனுக்கும் கன்னியருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மலர்கள், அரும்பாகி, சற்று உப்பி மொக்காகி, விம்மிப் போதாகி வெடித்து மலராகி... அப்புறம்? இதழ் இதழாக உதிர்ந்து கருகிச் சொரிந்து... வெறுந்தண்டு! காலத்தின் இரும்புக் கரங்களின் பிடிக்குச் சிக்காது, மெல்லியரின் கரங்களில் தவழ்ந்து, நாருடன் சேர்ந்து மாலையானல்...நாரை மையப் பொருளாக வைத்து இதனை மறைத்து மலர்களைத் தொடுத்து மாலையாக்கி... மாலையாகி விட்டால், மலர்கள் நித்திய வாழ்வு எய்தி...சே! எப்படியும் புதையுண்ட சடலத்தின் தசைப் பிரதேசத்தை மண் அரித்து மென்று தின்ற பின்னர், எஞ்சி வெளிவரும் எலும்புக் கூட்டினைப் போன்று கண்களில் அருவருப்புக் கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள... மீதம்? வெறும் நார்; நாரேதான்! மீதமாக இருக்கும் நார் நான், நான் நாரென்ருல்? மலர்கள்? மலர்கள் இங்கே பூத்துக் குலுங்கிப் பொலிவு காட்டுகின்றன. மனதைச் சிறையெடுக்கும் வண்ண வண்ண மலர்கள். மலர்கள் காந்தத் துளிகளா? மனம் இரும்புத் துணுக்கா? விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு டோக்கா கொடுத்து விட்ட உண்மை, என் கற்பனையில்