பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. இளைய தலைமுறை அழகான நடை-தனித்துவம் உள்ள வசன நடைஎன்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப மட் டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற்கள் தான் அடிப்படை என்ருலும் வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலைநயமான, நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கியிருக்கும், இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனு பவம், புர்வை வீச்சு மனப் பண்டி இவற்றுக்கு ஏற்பவுமே நடை நயமும் அமைகிறது. இவ்வாறு இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். இந் நோக்கில் பல எழுத்தாளர்களின் நடைகள் இப் பகுதியில் கவனிக்கப்பட்டன, "ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம், ஆற்றல், உணர்ச்சி, கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில்தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக் கிரு.ர்கள். இதுவும் ஆரம்பத்திலேயே சொல்லப் பெற் முன்ளது.