பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22? காலம் வளர வளர, புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றத் தோன்ற, உரைநடை வளர்ச்சியிலும் பல புதிய சாயல்கள் சேர்வது இயல்பேயாகும். அப்படிப் புதுச் சாயல் கொண்ட சில உரைநடைகளை இங்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். - தனித்தன்மை கொண்ட சிறுகதைக் கலைஞருள் பா. செயப்பிரகாசமும் ஒருவர். இவர் படைத்துக் காட்டு கிற எதார்த்தச் சித்திரங்கள் கூட உணர்ச்சி நிறைந்த கவிதை நடையிலேயே அமைகின்றன. அவர் வளர்ந்த கரிசல் மண்ணின் மணமும் அங்கு சோக மூச்சு உயிர்க்கிற மனித வாழ்க்கையின் நிறமும் அவருடைய எழுத்தில் கலந்து காணப்படுகின்றன. சாதாரணக் காட்சியில் கொலுவிருக்கிற அழகை செயப்பிரகாசம் சுட்டிக் காட்டுகிறபோது அது தனி மெரு குடன் ஒளிர்வதைக் காண முடிகிறது. கொத்தமல்லி பூத்துக் காய்ப்பதையும், அதை நம்பி வாழ்கிறவர்கள் உழைப்பையும் அவர் வர்ணிப்பதை ஒரு உதாரணமாகக் கூறலாம்: "நட்சத்திர தூசுகள் மண்ணில் உதிர்ந்துவிட்டது போல், காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் நடக்கிற போட்டியில், கொத்த மல்லி பூக்கிறபோதெல்லாம் கரிசல் மண் ஜெயித்தது. காசைச் சுண்டி எறிந்தால், கீழே விழாமல் பூமெத்தை விரிப்பில் தங்கியது. நிலத்திற்கு மேலே ஒரு முழ உயரத்தில், அவர்களின் வெள்ளி நாணயங்கள் மிதந்தன. காயாகி விளைகிறபோது, அவையெல்லாம் வெள்ளி நாணயங்களாய் பரிமாற்றம் கொண்டன,