பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை Ži மக்கள் பேசி ரசித்து வந்த தெளுவிராமன் கதை, மரியாதைராமன் கதை, கோமுட்டி செட்டி கதைகள் போன்றவையும், விக்கிரமாதித்தன் கதை மதன காமராஜன் கதை போன்றவையும் அச்சாகி ஜீவனுள்ள தமிழ் உரை நடை இலக்கியத்துக்குச் சான்றுகளாக விளங்கின. ஆறுமுக நாவலர், கா. நமச்சிவாய முதலியார் போன்ற வர்கள் பிழையறப் பாலடாக்டங்கள் எழுதி, நல்ல உரைநடை வளர்வதற்கு வழிவகுத்துக் கோடுத்தார்கள். ஆங்கிலக் கல்வியிஞல் பயனும் விழிப்பு உணர்ச்சியும் பெற்ற சிலர் தமிழ் உரைநடையில் புதுமைப் படைப்புக் களே ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு, குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெற்றிருக்கிருர்கள். பிரதாப முதலியார் சரித் திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளை, கமலாம்பாள் சகித் திரம் எழுதிய ராஜமப்யர், பத்மாவதி சரித்திரம் மாத வய்யா முக்கியமானவர்கள். ஆயினும், தமிழ் உரைநடை விறுவிறுப்புடன் வேகமாக வளர்ச்சிபெறத் தொடங்கியது, நாடு நெடுகிலும் அரசியல் விழிப்பும் விடுதலை வேட்கையும் ஏற்பட்ட பிறகுதான் என்று சொல்ல வேண்டும். மக்களின் நாட்டு விடுதலை உணர்வுடன் சமூக சீர்திருத்த உணர்வும் மொழி உணர்ச்சியும் கலந்திருந் தின. காலவேகத்தில் ஏற்பட்ட இவ்விழிப்பைப் பத்திரிகை கள் தூண்டிவிட்டன; இவற்றை வளர்ப்பதோடு தாங்களும் வளர முயன்றன. அதனல் பத்திரிகைகளில் கதைகள் அதிகம் இடம் பெற்றன. கதைகளுக்குத் தேவை பிறக்கவும், கதை எழுதுகிறவர்களும் தோன்றினர்கள். அவரவர் ஆற்றலைக் காட்டிப் புதுமை பண்ண பலரும் முயன்றதால், உரைநடை யில் பல சாயல்களும் வளர்ச்சியும் இயல்பாகவே தலே காட்டின.