பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாரதித்குப் பின் களத்துகேட்டில் வட்டமாய் மல்லிச் செடி அடுக்கி, திரை பிடித்து அடிக்கிமூர்கள். சிலம்பு லாவகம்போல் கம்பு வீச்சு விழுகிறது. விஸ், விஸ் என்ற கம்பு வீச்சுச் சத்தம் பாட்டுக்குப் பின்னணியாக வர பாடிக் கொண்டே அடிக் கிருர்கள். அவர்களின் வியர்வைத் துளிகளைப் போலவே அவர்களின் உழைப்பைப் போலவே, அந்தப் பாடல்களும் நீரடில்லாமல் வந்தன,” இன்னொரு வர்ணிப்பு “காலை மாலை என்ற பொழுதுகள் இல்லாமல் மலைக் காடுகளில் சண்முகமயில் ஏறி இறங்கியிருக்கிருள். தனிக் கட்டையாய் மலேக்காட்டில் ஏறி இறங்க அவளுக்குத் தெரிந்திருந்தது. அந்த மலே அவர்களுக்குத் தாயாக இருந்தது. அடர்ந்த காடுகளே அதன் மடியாக இருந்தது. அமிர்தம் கொஞ்சும் அதன் காம்புகளே ஆவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காடுகள் இகுள் நேரத்திலும், இருளடர்ந்த வழியிலும் அவள் தனியாகப் போய்வருகிற போதெல்லாம் இதுபோல் பயமுறுத்தியதில்லை. 'வீட்டில் எல்லோரும் உழைத்தபோதுதான் சோற்று மனம் காண முடிந்தது. வீட்டிற்குள் இருந்தால் வாழ்க்கை இல்லாமல் போனது. வாழ்க்கையைத் தேடி நிலைப்படிக்கு வெளியே வந்தபோது மலை தெரிந்தது. ஊரில் இருக்கிற எல்லோருக்கும் எதிரே மலைதான் தெரிந்தது. தாயின் கர்ப்பத்தில் இருக்கிறபோதே, அவர்களுக்கு மலை ஏறுவது - சொல்லித் தரப்பட்டது.” பா. செயப்பிரகாசம் கதைகளில் அங்கங்கே கையாள் கிற உவமைகளிலும் புதுமையும் கற்பனையும் செறிந்து விளங்குகின்றன. - - அவள் ரவிக்கையில்லாமல், வெள்ளைச் Gతాడిuుఖి, தாள் கள் மூடிய ஒரு மக்காச் சோளக்கதிரைப்போல் இருந்தாள்,