பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பாரதிக்குப் பின் வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழை காலத்து வெயிலினுடைய நிறமும் பற்றி ஈசாக்குக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்கு விளைகளில் விளைகிற பயிர் களுக்காகவும் ஆடு மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்ந் தான். ஆளுலும் ஈசாக்குக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாகத் திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப் போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போளுள். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன்பேரில் தப்புஒன்றுமில்லை. தண்ணிரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்துபோன பயிர்களை அழிக்கத்தான் அவனைப் போகச் சொன்ஞள் எஸ்தர் சித்தி. காய்ந்துபோன பயிர்களே அழிக்கிறதில் அவனுக்கென்ன தஷ்டம்? ஆஞலும்கூட ஈசாக்கு எவ்வள வாய் அழுதான். அவன் நிலம்கூட இல்லைதான் அது" அடுத்தாற் போல், வண்ணதாசன். இவருடைய உரை நடை இவரது கதைகளின் பலமாக அமைகிறது. வண்ணதாசனின் பார்வை தீட்சண்யம் மிக்கது. நுட்ப மாகப் பார்த்து கிரகித்து மனசில் பதிவுசெய்து வைக்கப் பெற்றுள்ள துண்ணிய விஷயங்கள் எல்லாம் அவரது உரை நடையில் சின்னச் சின்ன அழகுகளாக இதழ் விரிக்கின்றன. சிறிது சிறிதாகப் புள்ளிகளிட்டு, நெளிநெளிக் கோடுகளி குலும் நேர் கோடுகளாலும் அவற்றை எப்படி எப்படியோ இனத்து அழகான கோலங்கள் தீட்டி விடுகிற கலைத் திற மையை இவர் எழுத்துக்களில் காட்டுகிரு.ர். "இந்த நீளமான 58, 25 பிரயாணிகள் தாங்கிச் செல் கிற பஸ்ஸில் முதல் வரிசையில் நின்ற கண்டக்டரை பார்த்த பொழுது, ஏறினவாக்கில் கடைசி சீட்டில் உட்கார்ந்து விட்ட இவளுக்கு பஸ் முழுவதையுமே பார்க்க வேண்டிய தாயிற்று. ஸ்டாண்டிங் சீட் வாருமே இல்லாத பஸ்.