பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பாரதிக்குப் பின் பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்ட வேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல் வாரத்துக்கு ஒருநாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுது கொண்டிருக்கிற பையனின் சோகம் போல எந்தச் சத்துக் குறைவாலோ ஒட்டுவாரொட்டியாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுனிச் சிரங் கிற்கான பிரார்த்தனை போல கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து, இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல- - இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந் தவிட அசுரத்தனமாகத் தண்ணிரை இறைத் து இறைத்து ஏமாந்து கொண்டிருக்கிற சிறுவர்களின் பம் பரக் கனவுகள் போல ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள்.' மற்ருெரு குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் பொன்னிவன், . இவர் கரிசல் என்ற நாவலில் கரிசல் நிலச் சுற்றுப்புற வர்ணனைகளை அழகாக எழுதியிருக்கிருர். பல குறுநாவல் களில் நாஞ்சில் தாட்டுத் தமிழை வெற்றிகரமாகக்கையாண் டிருக்கிருர், கொண்ளைக்காரர்கள்’ என்ற நாவலில் வசன நடையை வளமும் கனமும் அழுத்தமும் கொண்டதாகப் பின்னியிருக்கிரு.ர்.