பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 23; சு.சமுத்திரம். அவர் தனக்கெனத் தனி உரைநடை கொன் டிருக்கிருர், அதில் லேசான கிண்டல், எள்ளல், சிலேடை போன்றவை ஆங்காங்கே கலந்து எழுத்துக்கு உயிரூட்டு கின்றன. உதாரணமாக "குட்பமும், கூடவே மாளிகைகளும் பரவிக் கிடந்த சென்னை நகரின் ஒரு கடலோரப் பகுதி. கடல் மண்ணின் மினுக்கத்தைப் போல் பெண்களும் அந்தக் கடல் மண்ணின் தெருக்கத்தைப் போன ஆண் களுமாக. புதிதாகப் பிரதிஷ்டை செய்திருந்த காவல் கன்னி யம்மனின் கோவிலுக்கு முன்ஞலும், பின்னலும் பக்க வாட்டிலுமாய்ப் பரவியிருந்தனர். கண்கொள்ளாக் கடலின் அலையோசை, கண் நிறைந்த பொய்க்கால் குதிரையாட்டத்தாலும், விசைப் படகு முதலாளிகள் அமர்த்திய கல்யாணிராகமேளத்தாலும். கட்டுமரக்காரர்கள் அமர்த்திய, இழு வோசை மேளத் தாலும், கோவில் குலுங்கிக் கொண்டிருந்தது. மூன்றுண்டுகளுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் அடித்துத் தாக்கிக் கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை மீனவரும் கடந்ததை மறந்து நடப்பதை நினைத்துக் களித்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் விசைப்படகு முதலாளிகள் கெழுத்தி மீன் போலவும், கட்டுமரக்காரர்கள் காஞ்சான் மீன் போலவும் கெழுத்தி கெழுத்தியோடும் காஞ்சான் காஞ்சாளுேடும் சேர்ந்திருப்பது போல் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்தும் அதே சமயம் கும்பலாகப் பிரிந்தும் தோன்றினர்கள்.