பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வ. வெ. சு. அய்யர் ஆற்றல் மிகுந்த அபூர்வ மனிதர்களில் வ. வெ. சுப்பிர மணிய ஐயரும் ஒருவர். (அவர் தம் பெயரை வ. வெ. ஸாப்ரஹ்மண்ய ஐயர் என்றுதான் எழுதி வந்தார்.) திருச்சி, வரகனேரியில் பிறந்த ஐயர் ரங்கூனில் அக்கீலாக இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டன் பயிற்சி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து சென்ருர். அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். இங்கிலாந்தில் ஆங்கில சங்கீதம் படிக்கவும், நடனம் கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினர். ஆனல் அங்கே தேசபக்தரும் வீரசிகா மணியுமான விநாயக தாமோதர சாவர்க்கரை ஐயர் சத்தித்துப் பழகிய பிறகு, அவருடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. அக்காலத்தில் அவர் செய்த வேலைகளும் தியாகங்களும் வியப்பானவை; வீரம் நிறைந்தவை. அணை எல்லாம் நமது நாட்டினருக்கு விரிவாகத் தெகியாமலே போய்விட்டன. வ. வெ. சு. ஐயர் எதிர்பாராத வீதத்தில் வீரமரணம் எய்திய போது, சாவர்க்கர் மனமுருகி எழுதிய வரிகள் உண்மையாகி விட்டன. வீரசாவர்க்கர் இவ்வாறு எழுதினர்: "உனது வாழ்க்கையின் அரிய கதை தற்காலத்தில்ஒருகால் எக்காலத்திலும் சொல்ல முடியாமலே போய்விட லாங் போலும். ஏனெனில் அதனைச் சொல்லக் கூடியவர்