பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 3? 'பார்க்கப் போனுல் நான் மரத்தான். ஆளுல் என் மனகிலுள்ளதை யெல்லாம் சொல்லுகிறதால்ை இன்னக் கெல்லாம் சொன்னுலும் தீராது. இந்த ஆயுசுக்குள் கண்ணுலே எத்தனை பார்த்திருக்கிறேன்! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணுலே பார்த்திருக் கிறேன். சிரிக்கிறீர்கள். ஆளுல் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேனும் பொய்யில்லே. நான் பழைய நாளத்து மரம்-பொய் சொல்லக் கத்ததில்லை." இப்படி ஆரம்பித்து, அங்கே விளையாட வருகிற குழந்தைகளைப் பற்றிச்சொல்லி, ருக்மணியை வர்ணிப்பது ரசமாக அமைந்துள்ளது. ருக்மணியும் நாகராஜனும் கடைசி முறையாகச் சந்தித்துப் பேசியதை மரம் நினைவுகூர்வதாக எழுதியுள்ள இடம் ஐயரின் ஆற்றலுக்குச் சிறந்த உதாரண மாக அமையும். குளத்தங்கரை அரச மரம் கதை நன்பர்கள் படித்து ரசிக்கவேண்டிய ஒரு படைப்பு ஆகும். இந்தியாவின் சரித்திர காலப் பெருமையைத் தமிழ் நாட்டினருக்கு அறிவிப்பதற்காகவும், மக்களுக்கு தேச பக்தியை ஊட்டுவதற்காகவும், ஐயர் சந்திரகுப்தன் சரித்திரம் எழுதினர். ஆகவே, கர்மவீரராக விளங்கிய வ.வெ.சு. ஐயரின் எழுத்துலக சாதனைகளும் பெரியனதான்.