பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. மெய்யப்பன், எம்.ஏ; தமிழ் விரிவுரையாளர், ஆண்ணுமலைப் பல்கலைக்கழகம் பதிப்புரை 20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் மணிக்கொடி காலம்" என்ற இலக்கிய வரலாற்றுத் திறய்ைவு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப் பையும் பெற்றது, அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக் கண்ணன் அவர்களின் பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை” என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளி யிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது. தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளி வந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருளுசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம் என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது. உரைநடை வளர்ச்சி பரிணும முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கன் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகை குறிப்பிடத்தக்கநூல்'பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை: