பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 பாரதிக்குப் பின் அறிஞர் டி. கே. சிதம்பரதாத முதலியார். 'உன்னத்தில் உள்ள விஷயம் அப்படியே வாக்கில் வரும்: நயம் உண்டு, வேகம் உண்டு, அவர்கள் அப்படி வரும் வார்த்தைக்கு ஜீவன் உண்டு, என்று சுட்டிக் காட்டியவர் அவர். டி. கே சி. உரைநடைபற்றி ஒரு முடிவுக்கு அந்ததை அவருடைய நண்பர்களில், ரசிகர்களில், 'வட்டத்தொட்டி’ (சங்கம்) உறுப்பினர்களில் ஒருவரான எஸ். மகாராஜன் பின்வருமாறு விவரித்திருக்கிருர்: "கருத்துக்கு ஒவ்வாத வார்த்தைப் படாடோபமும், திருகு முருகலும், சுவையற்ற கோணல்த் தமிழும் புலமை வேஷம் போட்டுக் கொண்டு நடமாடிய காலம் அது. அத்தக் காலத்தில் பள்ளி மாணவனுக இருந்த ரஸிகமணிக்கு இந்தக் கொடுங்கோன்மை எல்லாம் தாங்க முடியவில்லை. உரைநடை எப்படி இருக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கி, சில முடிவுகளுக்கு வந்தார்கள். எடுத்துக் கொண்ட விஷயத்தை, உண்மையோடு, நேருக்கு நேர் சொல்லக் கற்றுக்கோள்ள வேண்டும். கருத்தும் சொல்லும் சுகமாய்க் கலந்து கைகோர்த்து நடக்கவேண்டும். அடுப்பங்கரையில் பெண்கள் பேசுகின்ற தமிழிலே எவ்வளவு ஆற்றலும் உணர்ச்சியும் இருக்கின்றன. நாட்டுப்புறத்திலே பட்டிக் காட்டான் பேசுகிற தமிழிலே வகை வகையான சுவை யிருக்கிறதே. விஷயத்தைக் குறிபார்த்து அடித்த மாதிரி வல்லவா, அவன் சொல்லிவிடுகிருன். இதையெல்லாம் தமிழ்ப் புலவர்கள் சிரத்தையோடு ஆ ய் ந் து கொச்சையை அகற்றிவிட்டு, நாடோடித் தமிழிலுள்ள ரஸத்தைப் பிழிந்து தமிழ் வசனத்தில் பெய்துவிட வேண்டும். அப்போதுதான் தமிழ் எழுத்துக்கு வல்லமை பும் வளமும் ஏற்படும் என்று டி. கே. சி. வற்புறுத்தி வந்தார் கள். பேச்சுத்தமிழின் வளைவு நெளிவுகளோடும், பம்மல் பாய்ச்சல்களோடும் பழகினுல்தான் ஒரு எழுத்தானுைடைய