பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 49 தனித் தத்துவம் அவனுக்கே உரிய நடையில் வெளிப்படும் என்று அவர்கள் கருதிஞர்கள்.” இந்த முறையில் வெற்றிகரமான சாதனையாக அமைந்தது. டி. கே. சி. நடை. இதற்கு, இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில், ஆசிரியர் கல்கியின் கணையாழி யின் கனவு கதைத் தொகுதி முன்னுரையிலிருந்து எடுத்து எழுதப்பெற்ற பகுதிகள் நல்ல சான்றுகளாகும்" இருப்பினும், பாஷா ஞானம் பற்றி டி. கே. சி. எழுதி யுள்ள ஒரு கருத்துரை அவருடைய வசன நடைக்கு நல்ல உதாரணமாக அமையும். அத்துடன் அவர் சொல்ல விரும்புகிற எந்தக் கருத்தையும் எவ்வளவு அழுத்தமாக ஓங்கி அடித்துக் கூறும் இயல்பு பெற்றுள்ளார் என்பதையும் தெளிவுண்டுத்தும். ‘பாஷாஞானம் என்பது ரொம்பவும் அபூர்வமான காரியம். இது விஷயமாக மேல் நாட்டாரும் ரொம்ப ரொம்பத் திண்டாடி இருக்கிரு.ர்கள். ஆங்கில பாஷை இன்னது என்று தெரிய ஜான்ஸனுக்கு அநேக வருஷம் ஆயிற்று. பல வருஷங்கள் கழித்துத்தான் ஆங்கில பாஷையின் உண்மையான பாவம் அடிசன் எழுதிய கட்டுரைகளில் இருக்கிறது என்று தெரிய வந்தது தான் எழுதியது எல்லாம் கக்காபுக்கா பாஷைதான் என்றும் தெரியவந்தது. முன்னலே போகிறவன் அடிபிசகிக் கீழே விழுந்தால் பின்னல் போகிறவனுக்குத் தீவர்த்தி பிடித்த கணக்கு என்று சொல்லுவார்கள். ஆனல் ஆங்கில பாஷை சம்பந்த மாக அப்படிச் சொல்ல இடமில்லை. ஏனென் ருல், பின்ளுல் வந்த சஸ்கினும் அடிபிசகி விழுந்தார். செடி, கொடி, களிமண் எல்லாவற்றையும் வாரிப் போட்டுக் கொண்டு தன்னை இன்ஞர் என்று காட்ட முன்வந்தார், கடைசியில்