பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை தடை 5? (வார்த்தைகள் இருந்தால் போதாது) உள்ளத்தில் உயிர், அதாவது உண்மை உணர்ச்சி இருக்க வேண்டும்.” இதையே தான் பாரதியாரும் சொல்கிருர், உள்ளத்தில் உண்மை ஒளி உன்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம் என்று! டி. கே. சி. யின் உள்ளத்தில் நல்ல தெளிவும், உண்மை ஒளியும், உணர்ச்சியும், இவற்றுடன் ஒரு தைரியமும் நீறைந் திருந்தன. அவை அவருடைய எழுத்துக்களில் நன்கு பிரதி பலிக்கின்றன. டி. கே. சி. தமிழை ஆழ்ந்து அனுபவித்து ரசித்து மகிழ்ந்தார். அந்த ரசனையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் அலாதியான ஆனந்தம் கண்டார். கம்பராமா பணம், முத்தொள்ளாயிரம், மற்றும் பல நயமான தமிழ்க் கவிதைகளின் உயர்வை ஒயாது சொல்வி வந்தார். அவருடைய உள்ளத்தின் ஒளியை, உணர்ச்சியை, தமிழ்க் காதலை, சிந்தனைகளை நன்கு வெளிப்படுத்துகிற இதயஒலி’ எனும் கட்டுரைத் தொகுதி இலக்கியப் பிரியர்களுக்கு நல்ல விருந்து ஆகும்.