பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 6i கொள்கை வகுத்து, அவ்வாறே எழுதியும் பேசியும் புகழ் பெற்றவர் திரு.வி.க. பெண்ணின் பெருமை பேசுவதே அவருடைய முக்கியப் பணியாக இருந்தது. இயற்கை யோடியைந்த வாழ்வு வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர். நாட்டுப் பற்று, தொழிலாளர் நலம் போன்ற விஷயங்களிலும் அவர் அக்கறை காட்டினர். எழுதுவது போலவே பேசுவது என்ற கொள்கை உடையவராக இருந்ததால், தனது உரைநடை வெகு கடினமானதாக ஆகிவிடாதவாறு அவர் கவனித்துக் கொண்டார். "வீட்டை இன்ப ஒளி வீசுமாறு செய்யும் தெய்வ மணிவிளக்கல்லவோ பெண்? மனைவி வெறும் கலவிக்கு மட்டும் உரிய ஒருத்தியல்லள்; அவள் தாயுமாவள்; உடன் பிறந்தவளுமாவள்; மகளுமாவள்; கடவுளுமாவள்; எல்லாம் அவள். அவளிடத்து எல்லா இயல்புகளும் உள்ளன. இவை யெல்லாஞ் சேர்ந்த ஒருத்தியே மனையில் வாழத்தக்கவள் 领了歳”芯。 பெண் ஒர் இயற்கை வனம்போலக் காணப்படுவள். நீல வானமும், வெண் திங்களும், மாங்குயிலும், நீல மஞ்ஞையும் அழகிய மலரும், விரைக்கொடியும், அருவி கொழிக்கும் மணிகளும் பிறவும் ஒருங்கு திரண்டு பெண்ணெனப் பொலிதல் காணலாம். அழகுக் கடவுளேக் கண்டின்புற எவரும் வானத்தை நோக்க வேண்டுவதில்லை; மலைக்கேக வேண்டுவதில்லை: காடுகளில் புகவேண்டுவதில்:ைகடலை நாட வேண்டுவதில்லை; காவியங்களைப் புரட்ட வேண்டுவதில்லை; அழகுக் கடவுள் பெண்ணுகி யாண்டுங் காட்சியளிக்கிறது." - இவ்வளவு அழகாக எழுதிச் செல்லும் திரு.வி.க. இடைக்கிடை தனது பண்டிதத்தனத்தைக் காட்டிவிடுவதும்