பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இயல்பாக இருந்தது. அச் சமயங்களில், "இல்வாழ்க்கை நடாத்தவும் பிள்ளைகளைத் தக்கவழியில் வளர்க்கவும், சமயம் தேர்ந்துழி வேறு பல துறைகளில் இயங்கிக் கடளுற்றவும் பெண் மக்கள் பலதிறக் கலைஞானம் பெறுதல் இன்றியமை யாமை” என்ற ரீதியில் நடை புரண்டோடும். பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, தமிழ்ச்சோலே அல்லது கட்டுரைத் திரட்டு, முருகன் அல்லது அழகு, முடியா? காதலா? சீர்திருத்தமா? போன்ற பல நூல்களே திரு.வி.க. இயற்றியுள்ளார். இந்நூற்ருண்டின் முதற் பகுதியில், பரிதிமாற் கலைஞன், என்னும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மு. இராகவ அய்யங்கார், வேங்கடசாமி நாட்டார், பண்டித மணி மு. கதிரேசச் செட்டியார் , சோமசுந்தர பாரதியார் உமாமகேசுவரன் பிள்ளை முதலிய பேரரறிஞர்கள் உரை நடை வல்லுநர்கள் என்று சிறப்புப் பெற்றிருந்தார்கள், தங்கள் உரைநடை மூலம் தமிழை வளம் செய்து பெருமை புற்ற இவர்கள் அனைவரும் தங்களுடைய புலமையை வெளிப்படுத்துவதற்காகவே வசனத்தைக் கையாண்ட பெரும் பண்டிதர்களாக விளங்கினர்கள். இவர்களுடைய உரைநடையின் தன்மைகளை அறிய ஆசைப்படுகிறவர்கள், இப்பேரறிஞர்கள் எழுதிய நூல்களைத் தேடிக் கண்டு படித்தின்புறுவார்களாக,