பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி "தமிழ் நாட்டினர் தம் கருத்தை எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை எழுதுபவர்கள் மனத்திற் கொண்டு எழுதுவதுதான் பயனை அளிக்கும். மகாமகோ பாத்தியாய உ. வே. சாமிநாத அய்யர் இவ்வாறு ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிருர் . இந்த உண்மையை இயல்பாகவே உணர்ந்து, அந்த விதமாகத் தமிழ் எழுதத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு: உரிய முறையில் பயின்று, சரளமான நடை எழுதும் தேர்ச்சி பெற்று, எந்த விஷயத்தைப் பற்றியும் எளிமையாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதக்கூடிய கலை கைவரப் பெற்று, நன்கு புகழடைந்தவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆவார். தேச விடுதலை உணர்வினல் உந்தப் பெற்று எழுத்தாள ராக வந்தவர் கல்கி, தேசீயமும் மொழிப்பற்றும் அவரை நல்ல எழுத்தாளராக உருவாக்கின. ஆரம்ப காலத்தில் அவர் ஆறுமுக நாவலரின் புத்தகங்களைப் படித்து நல்ல நடையின் தன்மையை உணர்ந்து கொண்டார். இதுபற்றி அவரே இப்படி எழுதியிருக்கிருர்: "ஆறுமுக நாவலரின் பிரசுரங்களையெல்லாம் நான் படித்தேன். பால பாடங்களைப்படித்ததிலிருந்து தமிழை எவ்வளவு சரளமாகக் கையாளலாம் என்பதை ஒருவாறு அறிந்து கொண்டேன்