பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 65 ஆசிரியரோடு உடனிருந்து அனுபவித்தவர்களே சரியான படி உணர்ந்து அனுபவிக்கக் கூடியவர்களாய் இருந்தாலும், அவை எல்லோரும் வாசிக்கும்படியாகவும் ஆனந்திக்கும் படியாகவும் இருந்தன. அரசியல் விஷயமாகப் பத்திரிகை உலகத்தின் ஜாம்பவான்களே திணறும் படியாகவும் வியக் கும்படியாகவும் தலையங்கங்கள் வெளிவந்தன. அரசியலோ, சமூகத் திருத்தமோ, சமயத் திருத்தமோ எதாலுைம் சரி. உண்மைகளைப் பீரங்கிக் குண்டுகளைப் போல் வீசி எறிந்தன. அக்கினிச் சுவாலைகளைக் கக்கின. மக்கள் மனசில் இறுகிக் கிடந்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து, இருளையும் ஒட்டி விட ஆரம்பித்தன." கல்கியின் தமிழ் நடைக்கு டி. கே. சிதம்பரநாத முதலியார் அளித்துள்ள நற்சான்று இது. எல்லா விஷயங்களையும் எல்லோருக்கும் புரியக்கூடிய விதத்தில் எளிமையாகவும் சுவையாகவும் சூடாகவும் எழுதும் திறமை கல்கிக்கு இருந்தது. அதனால் அவருடைய எழுத்துக்கள் பெருவாகியான வாசகர்களேப் பெற்றது. கல்கியின் எழுத்து நடைக்கு ஒரு உதாரணமாகவும், எடுத்துக் கொண்ட விஷயத்தை எவ்வளவு ரசமாக, வாசகர்களின் கவனத்தைக் கவரும் வகையில் அவர் எழுதினர் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் அவருடைய சங்கீத விமர்சனம் ஒன்றை இங்கே தருகிறேன். கல்கியின் இயல்பான நகைச்சுவையும் இப்பகுதியில் காணக் கிடக்கிறது "ஸ்வாமிகளே! நானும் எவ்வளவோ சங்கீத வித்வான் களையும் அவர்களுடைய அங்கசேஷ்டைகளையும் பார்த்திருக் கிறேன். ஆளுல் கல்விடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் சகோதரர் இராமலிங்கய்யரைப்போல் அங்கசேஷ்டையின் சிகரத்தை அடைந்தவரை இதற்கு முன் பார்த்தது கிடையாது. இந்த அம்சத்தில் அவர் சாrாத் டைகர்