பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை முதலிலேயே சொல்லி விடுகிறேன்நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லே; இந்நூல் தமிழ் உரைநடை பற்றிய முழுமையான ஆய்வும் அல்ல. - இதன் தன்மை குறித்து நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன். பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடை வளமாகவும் பல வித வனப்புகளோடும் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வளரும் வசனநடை குறித்த சுவையான சிந்தனைகளே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். - இவற்றை நான் எழுத நேரிட்டதற்கு 'தீபம்" நா. பார்த்தசாரதி அவர்களின் ஊக்குவிப்பே காரணம் ஆகும். - இதர இலக்கியப் பத்திரிகைகள் செய்யாத பல நல்ல காரியங்களைத் தீபம்’ செய்திருக்கிறது. இலக்கிய விஷயங்கள் சம்பந்தமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பி. எஸ். ராமையாவின் மணிக்கொடி காலம்'; அதைத் தொடர்ந்து தான் எழுதிய சரஸ்வதி காலம்'; புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறிப்பிடத் தகுந்தவை. பிறகு தான் நான் பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை என்ற கட்டுரைத் தொடரை எழுதலானேன். இவ்விதம் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்த ‘தீபம்’ பத்திரிகைக்கும், திரு. நா. பா. அவர்களுக்கும் என் நன்றி உரியது. - இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதியில், நான் செய்துள்ள ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, இலங்கைப்