பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

յն 'அக்கினி என்று அறியாயோ என்னும் ராகமாலிகையில் நாதப் பிரவாகம் பொங்கிப் பொழிகின்றது. மலேச்சுனையி விருத்து கிளம்பும் அருவி சில இடங்களில் மதயானையின் தடையில் கம்பீரமாய்ப்போகிறது;சில இடங்களில் ஒடுவதே தெரியாமல் நிதானமாய்ப் போகின்றது; திடீரென்று ஓரிடத்தில் ஆகாச கங்கையைப் போல் அதிவேகமாய்க் கொட்டுகின்றது; கொட்டும் போது கோடி கோடி நீர்த் துளிகன் சூரிய இரணங்களில் பளிர் பளிர் என்று ஒளி வீசு கின்றன. இந்த ராகமாலிகையில் ராகத்தின் கம்பீர நடை, தாதப்ரணவ மயமான கார்வை, சங்கதிகளின் கலகலப் பொழிவு-எல்லாவற்றையும் காண்கிருேம், மலை அருவி யானது ஒரு முடுக்கு வரையில் வந்து திடீரென்று இன்னுெரு பக்கம் திரும்பி வரும் காட்சி வெகு ஆனந்தமானது; ஒரு ராகத்திலிருந்து இன்னெரு ராகத்துக்குத் திரும்பும்போது அந்த இன்பக் காட்சி நினைவு வருகிறது." இவ்வாருக எளிமை, தெளிவு. இனிமை, நகைச்சுவை, இத்டசே நயம் ஆகியவற்தைச் சேர்த்து அழகான ஒரு உரை நடையை வளர்த்துக் கொண்டார் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி. அரசியல் முதல் ஆத்மீகம் ஈருக அனைத்தையும் சுவையாகச் சொல்வதற்கு ஏற்ற வலிய சாதனமாக அவர் மொழியைப் பயன்படுத்தினர்.