பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}. போகிற போக்கில்... இந்த நூற்ருண்டின் முப்பதுகளுக்குன் தமிழ் வசன நடை வளமும் வனப்பும், எளிமையும் இனிமையும் பெற்று நன்கு வளரத் தொடங்கி விட்டது என்று கூறவேண்டும். தங்கள் புலமையையும் நூல் பயிற்சியையும் தெரியப் படுத்துவதற்காகப் பண்டிதர் பலர் விதம் விதமான உரை நடையை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதே வேளையில் தமிழ் நாட்டினருக்குப் புதிய புதிய கருத்துக்களையும், பல் வேறு விஷயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு எழுதியவர்களும் அதிகமாகத் தோன்றிஞர் கள். அவர்கள் மக்களுக்குப் புரியக்கூடிய விதத்தில் எளிய நடையில் எழுதினர்கள். அவர்களுடைய நடையில் உயிர்ப் பும் உணர்வும் கலந்திருந்தன. இந்த மொழி மலர்ச்சிக்கு நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் விடுதலை வேட்கையும்,சமூக முன்னேற்ற விழிப்பும் அடிப்படையாக அமைந்திருந்தன. தமிழ் மொழி மட்டுமல் லாது, இந்தியாவின் பல்வேறு மொழிகளும் இக்காலகட்டத் தில் இந்த இரண்டு உணர்வு விழிப்புகளாலும் பாதிக்கப் பெற்று வளமும் வளர்ச்சியும் அமைந்ததை வரலாறு தெரிவிக்கிறது. - விடுதலை வேட்கையையும் சமூகசீர்திருத்த உணர்வையும் மக்களிடம் பரப்புவதற்காக நாடு நெடுகிலும் வகை வகை