பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. புதுமைப்பித்தன் "தமிழுக்கு வசன இலக்கியம் புதுச்சரக்கு. இதனுல், வசனத்தில் என்ன அழகு இருக்கிறது? தினம் தினம் பேசுவது தானே என்று நினைக்கலாம். கற்பளு சக்தியும் உணர்ச்சியின் உத்வேகமும் நிறைந்த ஒரு வசனகர்த்தனிடம் வசனம் அற்புதமாக வளைந்து கொடுக்கும்.” இப்படி புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் எழுதியிருக் கிரு.ர். அத்தகைய வசன கர்த்தா தான் என்பதை அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிரூபித்துமிருக்கிருச். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் அரிய சாதனைகள் புரிந்துள்ள புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் தமிழ் வசன நடையிலும் பிரமிக்கத் தகுந்த அற்புதங்களைச் சாதித்திருக்கிருர், சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும் புதுமையும் அர்த்த காம்பீர்யமும் தரக்கூடிய ஆற்றல் அவருக்கிருந்தது. "தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும் ; முகவாய்க் கட்டையில் பேன் பற்றிலுைம் பற்றும், சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனல் மேற்கு ரத விதி வர்த்தகர்கள் அவரை சாமி, சாமி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கழுத்துப் பிடரிவரை வளர்ந்த சிகை; அதாவது, அள்ளிச் சொருகி, திலகுலைந்து தவழும் சிகை. தரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி, கண்ணுக்கு மேல்