பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 77 அந்த மகானின் சீடன் பேதுரு-கால தேவனின் பார்வையால் சலியாத குன்று’ என்று பரிவுடன் அழைக்கப் பட்ட பேதுரு-நம்பிக்கையின் அஸ்திவாரத்தைவிட்ட அந்த நகரத்திலேயே...அதே ரோமாபுரியிலே. மனித வம்சத்தின் அதிகார உன்மத்தத்தையும், தியாகத்தின் வரம்பையும், குறுகிய நோக்கத்தின் குரூரத்தை யும், பூசாரித்துவத்தின் சேவையையும், கொலை வெறியை யும், சிறப்பையும் சிறுமையையும் கண்டு சகித்துச் சகித்து, ஆயிரக் கணக்கான வருஷ அளவுள்ள மனித நாடகத்தின் படுதாவாக விளங்கும் அந்த நகரத்திலே... சர்வாதிகாரியின் பலாஜா வெனிஜியா’ என்ற அரசாங்க மாளிகையில்... மேடையில் பேஸிஸ்ட் துவஜம்-கண்ணேப் பறிக்கும் மின்சார விளக்குகள்... கீழே சதுக்கத்திலும், வீதியிலும் ஜனசமுத்திரம்உற்சாக வெறியில் தெைதறிக்கக் கோஷமிடும் மனிதக் கும்பல்...துரத்திலே தெரியும் கொலீளியம் வரை இப்படித் தான். கூட்டத்தில் குழந்தைகள் நசுங்குகின்றன. போலீஸார் பாய்ந்து மீட்கின்றனர். கூட்டத்தைச் சமாளிக்க முயலு கின்றனர். மக்கள் அரசாங்கத்துடன் ஆனந்தத்தில் லயிக்கும் பொழுது அதிகாரத்திற்கு அதிகாரமே து?” சொல்கிற விஷயத்துக்கு அதிகமான தெளிவும் அழுத்தமும் கொடுப்பதற்காகவும், ஒரு எண்ணத்தைக் கூறிச் செல்கையில் கிளைவிடுகிற வேறு எண்ணத்தை ஊடே குறித்து வைக்கவும். ஆங்கில வாக்கிய அமைப்பில் கையாளப் படுகிற Parenthesis என்கிற இடைவாக்கியம் அல்லது உபவாக்கியம் இணைப்பதை-இருபுறமும் கோடு