பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rig பாரதிக்குப் பின் களிட்டுத் தனியாகச் சேர்த்து வைப்பது-புதுமைப்பித்தன் தனது வசனத்தில் உபயோகிப்பதில் உற்சாகம் காட்டிஞர். இதை மேலே கண்ட உதாரணத்திலும் காணலாம். 'முருகதாசரைப் பொறுத்தவரை-அது அவரது புனை பெயர்-அது இரண்டு பேர் செய்யவேண்டிய காரியம்.” (ஒரு நாள் கழிந்தது) வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களே-ஏன் வாழ்க்கையையே-திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள் தாம் சிறு கதைகள் என்ருல், அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.’ (கடிதம்) "நான் அன்று ஒரு முழ நீளம் பெயர் கொண்ட,ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்ருகத் தெரியுமேஹோட்டலுக்குச் சென்றேன்.” (இது மிஷின் யுகம்} இந்த ரக உதாரணங்கள் புதுமைப்பித்தன் கதைகளில் திறையவே கிடைக்கும், இவ்வாறெல்லாம் அவர் எழுதி வ ந் த த ஞ ல், ‘புதுமைப்பித்தன் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுது கிருர்’ என்றும், புதுமைப்பித்தன், எழுத்துக்கள் சுலபமாகப் புரியாது’ என்றும் பலர் குறை கூறுவது இயல்பாயிற்று. தனது நடை பற்றி புதுமைப்பித்தனே இப்படி எழுதி யிருக்கிருர் 'கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நாகை எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு காதை, அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் அதிது. அதைக்