பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 79 கையாண்ட நானும் ஆங்கிலக் கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதல்ை, பலர் தான் என்ன எழுது கிறேன் என்பது பற்றிக் குழம்பிஞர்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொதுஜனங்களுக்குப் புரியாது என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள்.” கருத்தின் வேகத்தைக் காட்ட, வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுவதை அவருடைய 'மணிக்கொடி’ காலக் கதைகளில் மிகுதியாகக் காணலாம்

  • வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணைப் பறிக்கும் வெளிச்சம்! -

இதுதான்...தெரு மூலை! இதுதான் மனித நதியின் சுழிப்பு: இதற்கு உபநதிகள் போல் புெரிய கட்டிடங்களுக் கிடையே ஒண்டி ஒடுங்கிப் போகும் ரஸ்தாக்கள். இது வேறு உலகம்! ஒற்றைப் பாதையில் பாதசாரிகள்; மங்கிய மின்சார விளக்குகள். இடையிடையே எங்கிருந்தோ வரும் எக்களிப்புச் சிரிப்பைப்போல் டிராமின் க ைகணப்பு. மணி எட்டுத்தானே சொன்னேன்? கொஞ்ச நேரம் சென்றுவிட்டால், ஆ ட் க ள் நடமாட்டமிருக்காது. "ஆசாமிகள் வருவார்கள். வாடிக்கைக்குக் கிராக்கி உண்டு’ (கவந்தனும் காமனும்.) -