பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இரைநடை §§ பலரகமான கதைகளையும் அவர் எழுதினர். பகங்கரக் கதை, சமூக சித்திரம், புராணக் கற்பனையை ஆதாரமாகக் கொண்ட புதுக் கற்பனை, கேலிக் கதை, தத்துவக் கதை, கனவுக் கதை, வெறும் கதை-இப்படி எத்தனையோ ரகக் கதைகளை அவர் எழுதியிருக்கிரு.ர். ஒவ்வொன்றும் ஒரு தனிப்படைப்பாக, புத்தம் புதிய வகையாக, ஒவ்வொரு கோணத்தில் சார்க்கப்பட்டு வேறு வேறு வகையான விதங்களில் சொல் சித்திரமாக்கப்பட்டவையாக அமைந் திருக்கின்றன. கதைக்கு ஏற்ப, உணர்ச்சிகளுக்கேற்ப, கதாசிரியரின் கற்பனை வீச்சுக்கும் கதை சொல்லிச் செல்லும் போக்கிற்கும் ஏற்ருற்போல, நடையும் வளைகிறது, தெளி கிறது, கும்மாளி போடுகிறது, துள்ளிப் பாய்கிறது, சிரிக்கிறது, சீறுகிறது, கனம் பெற்று மிளிர்கிறது, அழகாக முன்னேறுகிறது, ஜீவனோடு இயங்குகிறது. சிற்பியின் தரகம், பிரம்ம ராக்ஷஸ், வாழ்க்கை, கலியாணி, அகல்யை போன்ற அவருடைய மணிக்கொடி’ காலக்கதைகளிலே கூட இவ் உண்மையை உணர முடியும். கவிதை பற்றி புதுமைப்பித்தன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிருர்: “கவிஞனுக்கு அவன் உள்ள அனுபவத்தை எடுத்துக் காட்டக் கூடிய நடை வேண்டும். உணர்ச்சி உத்வேகத்திற்குத் தகுந்தது போல் நடையின் நயமும் வேண்டும். கவிதையின் சாம்ராட்டு களுக்கு (சக்ரவர்த்திகளுக்கு) பாஷை அடிபணிகிறது. உணர்ச்சியின் மாறுதலுக்கு ஏற்றபடி நடையும் கதிபெற்று மாறுகிறது.” - கற்பனை ஆழமும், சிந்தனை வீச்சும், உணர்ச்சி வேகமும், அனுபவ மிகுதியும், கவி உள்ளமும் பெற்றிருக்கக்கூடிய வசனகர்த்தாவுக்கும் பாஷை அடிபணிகிறது. உணர்ச்சியின் மாறுதலுக்கு ஏற்றபடி நடையும் கதிபெற்று மாறுகிறது’