பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 器签 சிலேட்டும் கையுமாக நின்று நாமகள் கோட்டை வாசல் திறக்க வரங்கிடந்த போது, என்னடா, பேருக்கு ஏற்ரும் போலப் பலவேசமாக இருக்கியே; பின்னவே புலிவேசம் போட்டுடப் போறே, கையில் என்ன இருக்கு தெரியுமா? என்று பிரம்பைக் காட்டி அவர் வரவேற்றது மனசில் சிலா சாசனம் போலப் பதித்து கிடந்தது." (திசமும் நினைப்பும்) இவ்விதம் சுற்றியும் வளைத்தும் திருகல் முறுகல் பண்ணியும் சொற்களை வைத்து விளையாடுகிற ஆசை, புதுமைப்பித்தனின் பிந்திய கதைகளிலும் சாதாரண வாசகனை சிரமப்படுத்துகிற உரைநடையாக அதிகம் மலர்ந்து ஒளிவீசக் காணலாம். செல்லம்மான் கதையில் திறையவே இருக்கிறது. "ஐயோ அது புன் சிரிப்பா: எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியது மாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது. (காஞ்சனே) - "மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன. (செல்லம்மாள்) வர்ணக் கடிதாசி யொட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காய வைத்துக் கொண்டேன். (புரட்சி மனப்பான்மை) - இம்மாதிரி வாக்கியங்கள், புதுமைப்பித்தனின் ஆங்கில இலக்கிய ஈடுபாட்டின் பாதிப்பு காரணமாகப் பிறந்தவை என்று சிலர் உதாரணம் காட்டியிருக்கிருர்கள். . ஆங்கிலப் பயிற்சியின் விளைவாக எழுதப் LLLణమి என்று இவற்றை மதிப்பீடு செய்வதை விட, புதுமை பண்ண வேண்டும் என்ற தாகத்தின் பவளுகப் படைக்கப்பட்ட