பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதிக்குப் பின் தயங்கள் எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். புதுமைப்பித்தன் பின் வருவன போன்ற நயமான பிரயோகங்கள் பலவற்றையும் ஆண்டிருக்கிருர்: வயது ஐம்பதுக்கு மேலாகியும் மார்க்கண்ட வாவிடம்-சிறிது அசுர மோஸ்தரில்: வாலிபத்தில் பெண்கள் என்ருல் அர்ஜுன ரசனை’ ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயஞர் ரகத்தைக் சேர்ந்த பேர்வழி. தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான் ருசித்துப் பார்த்துத் தான் சமர்ப்பிப்பார்-பெண்களைக் உவமைகளையும் உருவகங்களையும் அதிசயிக்கத் தகுந்த விதத்தில் புதுமைப்பித்தன் படைத்திருக்கிரு.ர். "வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில் போல் திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலகங்கிரியைப் பணிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள். தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத் தாண்டிஞர்கள். தம் உள்ளம் போலக் கொழுந்து விட்டுப் புகை மண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம் வந்து கடந்தார்கள். தமது மனம் போல ஒயாது அலைமோதிக் கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கதையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினுர்கன். தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்து விட்டார்கள்." (சாப விமோசனம்)