பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 邀常 நடைக்கு ஒரு தனித்துவமும் சேர்த்திருக்கிரு.ர். ஆனல் இதுவும் அவருடைய தாவித் தாவிச் செல்லும் நடை மாதிரி சில கதைகளில்தான் காணக் கிடக்கிறது. புதுமைப்பித்தன் தமிழ் நடையில் பலவிதமான தன்மைகளையும் கையாண்டிருக்கிருர் என்பதுதான் முழுமை பான பார்வை ஆகும். ஆரம்ப காலத்தில் அவர் சர்வதேசச் சிறு கதைகளே அதிகமாகவே தமிழாக்கினர். பத்திரிகைகளில் பிரசுரமான அவற்றில் அநேகம், அவர் காலத்தில், உலகத்துச் சிறுகதைகள்’ என்ற பெரிய தொகுப்பு ஆகவும், அவர் இறந்த பின்னர் இதர கதைகள் பலவும் வெவ்வேறு: தலைப்புக்கள் கொண்ட சிறு சிறு தொகுதிகளாகவும் புத்தக வடிவம் பெத்றன. அவற்றிலும் புதுமைப்பித்தனது வசன நடைச் சிறப்பைக் காணலாம். மொழி பெயர்ப்பில், மூல ஆசிரியனது தடைச் சிறப்பையும் கொண்டு வர முயல்வோர் உண்டு. தடை நயம், வாக்கிய அமைப்புக்களே விட மூலத்தின் சுவையையும் உணர்வையும்-அதன் ஸ்பிரிட்டை-மொழி பெயர்ப்பில் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவார்கள் சிலர் புதுமைப்பித்தன் பிந்திய இனத்தைச் சேர்ந்தவர் என்பதை 'உலகத்துச் சிறு கதைகள் உணர்த்தும். சுவாரஸ்யமான, அழகான, அருமையான இக்கதைகளுக்கு புதுமைப்பித்தன் தமிழ் தனி வசீகரம் அளித்துள்ளது.