பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g தமிழ் உரைநடை வரலாறு பற்றிய மேற்கூறிய ஆக்கங் கள் உள்ளன என்பதை மாத்திரமே இக்குறிப்பின்மூலம் கூற விரும்புகின்றேனே பன்றி இவை போதும் என்ற கருத் தில் இதனை தான் எழுதவில்லை, தமிழ் உரைநடையின் வளர்ச்சி பற்றிய புறதிலே ஆராய்ச்சி முடிவுகளிலும் பார்க்க உரைநடை வளர்ச்சிக்கு ஆக்க எழுத்தாளன் என்றவகை யிலும் விமரிசகன் என்ற வகையிலும் கடந்த பல வருடங் களாகப் பணியாற்றி வரும், ஆக்க நுண்ணுணர்வும், வெளிப் பாட்டுத் திறனும் விளக்கமான பொது நோக்கும்கொண்ட ஒருவர், தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றில் தானே இடம் பெறவேண்டிய ஒருவரீ, தமிழ் உரைநடைப்போக்கின் சாயல்கள் பற்றிய தமது சிந்தனைகளை எழுதத்தொடங்கி புள்ளமை தமிழ் உரைந.ை வரலாற்ருய்வாளர்களுக்கும், "உரையைத் தமது தொடர்பு முறைமை யாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சியூட்டுவதாகவுள்ளது.” இவ்விதம் தமது கருத்தை அறிவித்த, எனது மதிப்புக் குரிய நண்பர் டாக்டன் சிவத்தம்பி அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் உரியன. பயன் கருதாது, நல்ல பல நூல்களே ஆர்வத்தோடும் இலட்சிய வேகத்தோடும் வெளியிட்டு வருகிற மணி வாசகர் நூலகம் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் இக்கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி, கிறந்த முறையில் நூலாகப் பிரசுரித்திருப்பது எனக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். திரு மெய்யப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் உரைநடை பற்றிய இந்தப் புத்தகம் வித்தியாச மான ஒரு நூல் என்பதையும், பயன் நிறைந்த இனிய இலக்கிய விருந்து என்பதையும் ரசிகர்கள் உணர முடியும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வல்லிக்கண்ணன்