பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாரதிக்குப் பின் கதாபாத்திரங்களின் பேச்சை அப்படி அப்படியே கொச்சை மொழியில் எழுதுவதில் கு. ப. ரா. சிரத்தை காட்டிஞர். உதாரணமாக "இவங்கப்பனுக்குக் காலரா கண்டுருக்கு டாகட்டரெ கூட்டியாரனும். அவருக்குரெண்டு ரூவா பீசாம், ஒங்களுக்கு ரொம்பப் புண்ணியம், இண்ணக்கிக் கொடுத்தா நாளெக்கி வண்டி வாடவெ-' என்று பூங்கா சொல்லி முடிப்பதற்குள் சேர்வைகாரர் குறுக்கிட்டார். - ரெண்டு ருவாயா! ரூவா கெளம்பரதுே கஷ்டமா விருக்குதே! நேத்துத்தான் இன்கம்டாக்சு வரிக்குப் பொறுக்கிப் பொணச்சு அனுப்பினேன். அந்தப் பய வேலு. குத்தவெ பாக்கி தரணும், ஏவே, அவனெப்போயி-’’ "ஐயோ! அவசரமாச்கங்களே! நாலுதரம் போயிருச்சு, நடக்கமாட்டல்லேங்கராரு, கன் இருட்டுதாம்.” அவசியம் என்று தோன்றுகிற இடத்தில் சூழ்நிலை வர்ணிப்பை கு. ப. ரா. அழகாக இணைத்திருக்கிருர், அபூர்வமாக வருகிற இத்தகைய வர்ணனைகள் நயமான சொற்சித்திரங்களாக விளங்குகின்றன. புதிர் என்ற கதை யில் உள்ள ஒரு வர்ணிப்பு இது "சாலையில் இரண்டு பக்கங்களிலும் நெல்வி மரங்கள் தடுவில் சில இடங்களில் நாவல் மரங்களும் இருந்தன. ஆடிமாத முடிவாகையால் சாலேயெல்லாம் நாவல் பழங்கள் கொட்டிக் கிடந்தன. இரண்டு பக்கங்களிலும் கண்ணுக் கெட்டிய துரம் வரையில் தன் செய்கள். நடவுகாலம். வயல் களிலெல்லாம் ஐலம் நிறையக் கட்டியிருந்தார்கள். சேறு புளித்த மாவுபோல் நுரைத்துப் பொங்கி நின்றது. சில இடங்களில் நடவாகி இருந்தது. சோகை பிடித்த மஞ்சள் நிற நாற்றுக்கள் தூரதுாரமாக நடப்பட்டிருந்தன. சில