பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாரதிக்குப் பின் ஆராய்ந்து பார்த்தால் அழகு தத்துவமுமல்ல; உருவமு மல்ல; இரண்டும்தான். இரண்டும் கலப்பு தெரியாத முறை யில் கலவை கொண்ட ஒரு உருவத் தத்துவம். அழகு வாழ்க்கையில் தென்படும் பொழுது பொதுவாக உருவம்; கலையில் தென்படும் பொழுது பொதுவாக தத்துவம். இரண்டிற்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. கலையில் சிலை உருவமாக இருக்கிறது; வாழ்க்கையில் ராகம் தத்துவமாக இருக்கிறது. உருவமோ தத்துவமோ அழகு என்பதற்கு எது உரைகல்? ஒன்றை அழகு வாய்ந்தது, எழில் பெற்றது, வணப்பு மிக்கது, கவர்ச்சி ஆண்டது என்று எப்படிச் சொல்கிருேம்? மனிதனுடைய உள்ளம்தான் அதைத் தீர்மானிக்கும் அதிகாரி: உணர்ச்சியை எது சந்திரோதயம் சமுத்திரத்தைத் துரண்டுவது போலத் தூண்டுகிறதோ அது அழகு. சூரியரச்மி தாமரையை மலரச் செய்வது போல எது மனித உள்ளத்தை விரியச் செய்கிறதோ அது எழில்; இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல எது பஞ்சேந்திரியங்களின் மூலம் மனதைக் கட்டுகிறதோ அது வனப்பு. ஒளி விட்டிலை அழைப்பதுபோல எது மனிதனே அழைக்கிறதோ அது கவர்ச்சி. அழகு தந்த நிறத்திலிருக்கிறது; அங்க நிறைவிலிருக் கிறது; கண் இமைப்பிவிருக்கிறது; இதழ்ப் பிரிவிலிருக்கிறது; நிலா வானில் இருக்கிறது; குரல் துவண்ட முணுமுணுப்பி லிருக்கிறது; துடிக்கும் தாரஸ்தாயியில் இருக்கிறது. கண்ணில் பதிகிறது; செவியில் பாய்கிறது; ஸ்டர்சத்தில் ஏறுகிறது; ராசியில் மணக்கிறது; வாயில் சுவை தட்டுகிறது. உள்ளத்தில் இவ்வாயில்கள் வழியே பதிவு பெற்று மனே