பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பாரதிதாசன்

அக்குயிலின் அலகையும் வாயையும் பாராட்ட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

கருநெய்தல் காட்டரும்பு
போலும் குவிந்த
இரண்டலகு தம்மில்
பிரிந்து குரலெடுக்க
வாயிற் செவ்வல்லி
மலர்கண்டு நான் வியந்தேன்

என்று பாராட்டி மகிழ்வதோடு அதன் அலகுக்குச் சாமணத்தையும் உவமை கூறுகிறார்.

வறிஞனாக இருப்பவன் வள்ளலாக இருக்க முடியாது. ஆனால் குயில் அதற்கு விதிவிலக்கு என்று கருதுகிறார் கவிஞர். சொந்த வீடு கூட இல்லாத ஏழைக்குயிலிடம் குடிகொண்டிருக்கும் இந்த உயர்ந்த பண்பை

சேய்மையிலோர் சோலைக்குச்
செல்லும் குயிலினிடம்
தூய்மைமிகு பண்பொன்று
கேட்பீர்; சுவையைப்
படியளக்கும் வையத்தார்
உண்ணும் படியே
குடியிருப்பொன்றில்லாக் குயில்

என்று பாடுகிறார்.

கவிஞன் உள்ளம் வியப்பிற்குரியது. அவன் எதை விரும்புகிறான், எதை வெறுக்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் உள்ளத்தின் ஓட்டத்தைப் பின் தொடர்ந்து சென்றால்தான் உண்மை விளங்கும். காலைக் கதிரவனை, மாலை நிலாவை, தண் பொழிலைத், தாமரையை விரும்பும் பாரதிதாசனுக்கு 'இருள்' மிகவும் பிடித்திருக்கிறது. அழகின் சிரிப்பில் இருளைப் பற்றியும் பத்து விருத்தங்கள் எழுதியுள்ளார். இருளில் சுவைக்க என்ன இருக்கிறது