பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 13 மூளையைச் செலவு செய்யப் பயந்தவர்கள் முந்திய கவிகள் வகுத்த உவமை இலக்கணத்தை, அப்படியே பின்பற்றத் தயங்கவில்லை. அதன் காரணமாக தாமரையும் முத்தும், முல்லையும் எள்ளுப்பூவும், வள்ளையும் செங்காந்தளும் போனால் உவமைக்கு வேறு பொருளே இல்லை என்று எண்ணும்படியாயிற்று. இவ்விதக் காவியங் களையே படித்து அலுத்துப்போன உள்ளத்திற்கு அருமையான மாற்றுக்கிடைத்தது. அதுதான் பாரதிதாசன் கவிதை. பாரதிதாசன் மங்கையை நீராமின்னாளோ? என்று வியக்கவில்லை. ரம்பை, ஊர்வசி என்று உவமிக்கவில்லை. பூலோகத்துப் பெண்களுக்கு உவமையாக சர்வ சாதாரண பூலோக விஷயங் களைத்தான் கூறுகிறார். அவை எவ்வளவு புதுமையாக, அழகாக அமைகின்றன! 'சிப்பம் பிரித்தெடுத்த சீனத்துப் பொம்மை’ 'கலைக்காத சாத்துப்படிச் சிலையைப்போல்’ "படிகத்தும் பதுமை போன்றாள்' என்பன போன்ற சொற்கள் பிரமிக்க வைக்கின்றன. அழகியின் பல்லுக்கு உவமை கடற நமது கவிஞர்களுக்கு அகப்பட்டவை இ ர ண் ேட இரண்டுதான், அந்த முத்தும் முல்லையும் என்ன பாவம் செய்தனவோ - அல்லது புண்ணியத் தானோ-மெல்லியலாரின் பல் முன்னிலையிலே வெட்கித் தலை குனிந்து கொண்டே இருக்கின் றன கவிதையில்தான். இதன் காரணம் சோம்