பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆ பாரதிதாசன் உவமை நயம் இஒர, சிந்தனைத் தேக்கமோ, என்னவோ! ஆனால் பாரதிதாசன் இதோ சில உவமைகளைக் காட்டுகிறார், ஆகா என வியந்து போகும் படியாக.

தென்னம்பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக்காரி' மயிலிறகின் அடியைப்போல் பல்லிலெல்லாம் ஒளி யிருக்கும்’ இந்தப் போக்கில் பெண்ணின் எழிலைக் கூறும் புதிய உவமைகள் ஆங்காங்கே மலர்கின்றன.
  • வெண் முத்தில் நீலம் விளையாடிக் கொண்டி

ருக்கும் கண்கள்" அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியள்’ வதங்கவிலாச் சண்பகத்து நல்லரும்பு சாடை புரிகின்ற விரல்: கன்னம் ஈரச் சந்தனத்துப் பலகை போல் குளிர்ந்திருக்கும் பழச்சுளையின் வாய் கண் ணாடிக் கன்னம் வடிவத்தின் ஆதிக்கம் அச் சடித்த பதுமை கடவத் தெரியாக் குயிலின் குஞ்சு’ "தாவாச் சிறுமான் மோவா அரும்பு’ இவ்விதம் அழகிய உருவங்களாக உவமை களை எழுப்பும் கவிஞர் பழம் எடுத்துக்காட்டு களைக் கையாளும்போதுகட்ட அவற்றில் தனி நயம் புகுத்தி விடுகிறார் திறமையாக.

  • மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான் வில்லின் குலத்திற் பிறந்ததேன்? கன்னத் றமிழ்க்கவி வாணரின்-உளக் கற்பனையே உருப் பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?