பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 15 "தண்ணிலவும் அவள் முகமோ! தாரகைகள் நகையோ! தளிருடலைத் தொடும் உணர்வோ தன் மணஞ்சேர் குளிரும் விண்ணிலம் கார் குழலோ!

  • காணும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க்கள் வெறியோ!

அல்லி மலர்த் தேன் தண்டமிழ்த்தாய் மொழியோ!' என்று அடுக்கிச் சென்று 'கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே' என முடிக்கும்போது ரசிக்காமலிருக்க முடியாது. பெண்ணின் வதனம் சந்திரன், அவள் சந் திரிகை என்பதெல்லாம்நாம் அடிக்கடி கேட்பவை. அவள் கடந்தல் கருமேகம் என்பதும் தெரியும். மேகத்திரை நீக்கித் தலைகாட்டும் அம்புலியை எல்லோரும்தான் பார்க்கிறோம். குளித்துக் கரை யேறும் அணங்கும் நம் பார்வையில் படுகிறவள் தான். சர்வ சாதாரணக் காட்சி. ஆனால், * முசிலைக் கிழித்து வெளிக் கிளம்பும்-ஒரு முழுமதி போல நனைந்திருக்கும்-தன் து கிலினைப் பற்றித் துறைக்கு வந்தாள் என்று கவிஞர் சுட்டிக்காட்டும் பொழுது அதில் நாம் புதுமையைக் காண்கிறோம். அழகினுக்கே ஒர் அழகாய் வந்த மங்கை அணிந்ததனால் ஆபரணங்களும் அழகுற்றன என அதிசயிக்கும் தமிழ்க் கவிப் பண்பிலே, கவிஞர் ஒர் புதுமையைக் காட்டியிருக்கிறார்.