பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 17 சியை இப்பொழுதும் நன்கு பருகும்படி அழகாக விருந்தளிக்கிறார் பாரதிதாசன். தூங்காமல் தாயின் முகம் நோக்கிச் சிரிக்கும் குழந்தையிடம் அவள் சொல்கிறாள் :

  • அன்னை முகம் வெண்ணில்வே ஆனாலும் உன்

விழியைச் சின்ன தொரு செவ்வல்லி ஆக்காமல் நீ யுறங்கு ஒரு பெண் அழுகிறாள். அவள் கண்ணிர் வடிப்பதைக் கூறும் கவி முத்து முத்தாகக் கண்ணிர் சிந்தினாள்’ ‘மாலை மாலையாகக் கண்கள் நீரை உகுத்தன வெள்ளம் போல் புரண்டது கண்ணிர்’ என்ற தன்மையில் எழுது வதுதான் வழக்கம். புரட்சிக் கவிஞரோ "படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து பார்ப்பது போல் அமுதவல்லி கண்ணிர் வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள் அங்கிருந்தோர் என்று காட்டும்போது நாம் புரட்சியையே காண் கிறோம்.