பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணழகு மங்கையர் வர்ணனையில் புதுமையான உவமைகளைச் சிருஷ்டித்த புரட்சிக் கவிஞர் ஆணழகனைக் கூறும் கட்டத்திலும் புதிய, சுவை யான உவமைகளை ஆக்கியிருக்கிறார். பழமை யும் புதுமையும் இழைந்து மின்னும் ஒரு பகுதி இதோ: மீதுயர்ந்த இரு தோள்கள் ஒளியை வாரி வீசுகின்ற குன்றங்கள்! மறவன் துக்கி ஊதுகின்ற வளைகொம்பின் புருவத்தின்மேல் உயர் நெற்றி அஞ்சாமை முழங்கும் கூடம்! போதுகின்ற இளங்களிறு போல் நடந்து முன்வாயிற் புன்னகையை விளைப்பான்! கிளிக்கழுத்தின் பொன் வரி போல் அரும்பும் மீசை கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல ஒளித்திரை போல் தலைமயிர் சிங்கத்தின் தோற்றம் உயர்ப்பரிதி வான் போன்ற மேனி வாய்ந்தான்! துளித்த தறுந் தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்கு குரல் முழங்குகின்ற கடலே! இன்னும் ஒரு புதுமை: நெடிதுயர்ந்த குன்றமும், ஒங்கிய மலையும் வீர இளைஞனுக்கு உவமைகள்தாம். அவை: தவிர வேறு வேண்டுமானால் நமது புதுமைக்கவி கறுகிறார், கேளுங்கள். ~ அடி பிடித்த வேர் கல்லி நூல் பிடித்து வாள் பிடித்தறுத்தெடுத்த செம்மரத்தில் வான்பிடிக்கச் செப்பனிட்ட தேர் போன்றான்!