பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் அழகனும் அழகியும் சந்திக்கிறார்கள். கண் களைக் கண்கள் கவ்வ, இடையே காதல் பிறக் கிறது. அதுதான் உயிர்களின் இன்பமாய் அமைவது போல, கவிதைக்கும் காவியத்திற்கும் கலைகளுக்கும் உயிர் நாடியாகத் திகழ்கிறது. காதலையும், காதலர் இன்பத்தையும், பிரிவை யும் வேதனையையும், பொதுவாகக் காதலற உள்ளப் பண்பையும் வாழ்வையும் பற்றிக் கூறாத இலக்கியம் இல்லை; கலை இல்லை. எவ்வளவோ காலமாகக் கையாளப்பட்டு வரும் இந்த தத்து வத்தை இன்னும் எத்தனையோ காலத்திற்குப் பிறகும் கூட ரசித்தும் பாடியும் போற்றியும் மகிழத்தான் போகிறார்கள் கவிகளும் கலைஞர் களும். இந்தக் காதல் தத்துவத்தைக் கன்னா பின்னா’ என்று, கேட்டு கேட்டுப் புளித்துப் போன தன்மையிலேயே, புதுமையின்றி எல்லோரும் எழுதப் போகவேதான் படிப்பவர்களுக்குச் சலிப்பு விளைகிறது. ஆனால் திறமையின் மெருகு பட்டால் அது அளவற்ற இன்பம் தருகிறது. தொட்ட சொற்களில் எல்லாம் தங்கத்தைத் தேக்கும் வன்மை பெற்ற கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் காதலைப் பற்றிக் கூறுபவை அத்