பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 37 தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சிலிர்க்கும் சிங்கம்’ எனவும் அவர் ஞாயிற்றைக் காட்டுவது அழகா யிருக்கிறது. ஒளியின் மலர்ச்சி பற்றி அழகாக இசைத் துள்ள கவிஞர் ஒளி தேய்ந்து இருள் பெருகுவதை வர்ணிக்கும்போதும் இனிய உவமைகளைக் கையாண்டிருக்கிறார். அவை எல்லாம் ஆகா!' * அபாரம்’ என ரசித்துப் போற்றுதற்குரியன. 'குடும்ப விளக்கு’ எனும் காவியத்தில் இரவின் பவனியை எழிலாகச் சித்திரித்திருக்கிறார் பாரதி தாசன். விருந்து உண்டு, ஆடை மாற்றி, அழகு செய்து கொண்டு, சிலம்பொலி கட்டியம் கடற ஒயிலோடு வருகிறாளாம் இரவுப் பெண்ணாள். இந்த உருவகம் எளிதாய்ப் புரிந்து விடும், கவிதை யைப் படித்தால் மேற்றிசைக் கதிர்ப் பழத்தை விருந்துண்டு, நீல ஆடை மாற்றுடையாய் உடுத்து மரகத அணிகள் பூண்டு கோற்கிளை ஒடுங்கும் புற்கள் கொட்டிடும் இலகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற் கரும்பான இரவு வந்தது இருளை ஆடையாகவும், விண்மீன்களை அணிகளாகவும் பூண்ட கோலத்தைக் காணும் கவி வேறோர் இடத்திலே வினவுகிறார்; புனை