பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் தி 45 அழகைக் கண்டார். அவ்வளவும் கவிதையாயின. சிட்டுக்கள் பாய்வது, புறாக்கள் திரிவது, மயிலின் ஆட்டம் அனைத்துக்கும் உவமைகள் சொக் கழகுச் சொற்களாக அமைந்துள்ளன. புறாக்ககூட்டம் அனைவரின் கவனத்தையும் தான் கவர்கிறது. ஆனால் வண்ண வண்ணப் புறாக்களுக்கு ஏற்ற உவமைகள் உதிர்ப்பது என்பது எல்லோராலும் இயலாது. அதிலும் பாரதி தாசன் கூறுவது போல் உவமிக்க யாராலும் முடியாது. இது உறுதி. உயர்வு நவிற்சியல்ல. இதோ பாருங்கள்...... "கீழ்ச் சரிந்த கோட்டுப்பூப் போற் புறாக்கள் குதித்தன. அவை எப்படி எப்படி இருந்தனவாம் என்றால், "இரு நிலா இணைந்து பாடி இரையுண்ணும்’ வெள்ளைப் புறாக்கள் இரண்டு நிலாவாக மின்னுகின்றன. மற்றிரண்டு தாமரைப் பூப்போல. எத்தகைய தாமரை? அசெவ்விதழ்கள் விரியாத தாமரை போல் ஒர் இணை' சிலவோ மெல்லியர்கள் கருங்கொண்டை இன்னும் கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து, மேலும் ஒரு பக்கம் இரு வாழைப்பூ உயிருள்ள அழகின் மேய்ச்சல்!” அடுக்கி வந்த உவமைகள் அத்தனைக்கும் அழகின் முத்தாய்ப்பாக விழுந்திருக்கிறது. உயி ருள்ள அழகின் மேய்ச்சல் என்பது. சிட்டுக்கள் பறந்து வந்து தழை கிளை மீது வீழ்வதை வானத்துக் குமிழ் பறந்து வையத்தில்