பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஜ் 57 என்று கூறும் நயம் உய்த்து உணரவேண்டியது. அறிஞர்கள் என்ன செய்கிறார்கள்? ஆரம்பகாலத் தில் மெளனத்தாழ்ந்து தமிழாராய்கிறார்கள். பிறகு, தாம் அறிந்த நயங்களை எல்லோரும் அனுபவித்து இன்பம் பெறுவதற்காக, எடுத்துக் கடறுகிறார்கள். ஒரு வகையில் மலர்களும் அதே போல விருந்தளிக்கின்றன. இந்த உண்மையைக் கவிஞர் இணைத்துக் காட்டும்போது ஆகா என வியக்க நேரிடுகிறது. "மூடிய வாய் திறத்து உளமார முன்னாளெல்லாம் தேடிய தமிழுணர்வைத் தின்னவே பலர் க்கும் தந்தும் வாடாத புலவர் போலே அரும்பிப் பின் மலர்ந்த பூக்கள் வாடாது தேன் கொடுக்கும் வண்டுகள் அதைக் குடிக்கும்’ குன்றத்தை இருள் மூடுகிறது. இருளில் குன்றம் மறைந்து விடுகிறது. அப்படி ஆழ்ந்த நிலையில் அதற்கு உவமை என்ன? இருந்த ஒர் கருந்திரைக்குள் இட்டபொற் குவியல் போலே கருந்தமிழ்ச் சொல்லுக்குள்ளே கருத்துக்கள் இருத்தல் போலே இருள் முடிற்று குன்றத்தை" தமிழ்ச் சொல்லுக்குள் கருத்துக்கள் இருத்தல் போலே என்று சொன்ன உடனேயே அடடா" என்ன பொருத்தம்! என்று ரசிக்கிறோமல்லவா!