பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுயுகக கருதது மனிதர்கள் மனிதராக வாழவேண்டும்;கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்துப் புதிய தோர் உலகம் செய்யவேண்டும் என்று அறிஞர் கள் ஆசை கொள்கிறார்கள். புதுயுகத்தை நிலை நாட்ட விரும்பும் சிந்தனையாளர்கள் இன்றைய மனிதரின் நிலைகெட்ட தன்மையை உணரும் போது சீறுவது இயல்பு. இன்றைய இழிநிலை யைச் சுட்டிக் காட்டி, சொல்லாலே சுட விரும்பு கிறவர்களில் கவி பாரதிதாசனும் ஒருவர். அவர் மனிதர் உள்ளப்பாங்கை ஆராயும் போது பலசரக்குக் கடை பரப்பிவைத்தது போலி ருப்பதையே காண்கிறார். கடுகுபோல் சிறிய உள்ளமும், அதற்கு அண்ணனான துவரை, அதற்கு அண்ணாத்தைகளான:தொன்னை போல், மாம்பிஞ்சு போல் தான் தோன்றுகின்றன. மக்கள் உள்ளங்கள் அகண்டதாய், விருப்பு வெறுப்பற்ற புனிதநிலையுற்று அன்புநிறைந்த தாயுள்ளம் போன்ற பெரிய உள்ளங்களைக் காணோம். இத் தகைய உள்ள நிலை எங்கும் உள்ளதானால் சண்டையே இல்லையே- தன்னலந் தீர்ந்த தாலே என்கிறார். சரி, கடுகு போன்ற சிறுஉள்ளம் எது? தான், தனது, தன்னுடைய, தன்னால், தனக்கு, தன் னின், தன்னை என்று சகலமும் தானே யாகி வாழும் அப்பாவிதான் இந்த முதல் வகை.