பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 61 'தன்பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன் சின்ன தொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன்' அவனை வீணன்' என்று வெறுத்து ஒதுக்குகிறார் கவிஞர். அதிலும் சிறிய வீணன்-அற்பன் அவன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்' ஆகா எங்கள் ஊரைவிட்டால் வேறு ஏது’ என்று கிணற்றுத் தவளை வேதாந்தம் பேசி தன் னுாரிலேயே ஒடுங்கிக் கிடப்பவன் துவரைபோல் உள்ளம் பெற்றான். அதற்கு மேற்பட்ட தொன்னை உள்ளமும் உண்டு. கன்னலடா என் சிற்றுார் என்போனுள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரையுள்ள ம்! தொன்னையுள்ளம் ஒன்றுண்டு; தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிற நாட்டை துன்புறுத்தல்" அப்படியானால் மாம்பிஞ்சு போன்ற உள்ளம் எது? ஆயுதங்களை ஒழித்து அமைதி காணக் கிளம்பி வாயடி கையடியில் இறங்குபவர்கள் தான். உலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தூய உள்ளம், அன்புள்ளம்; பெரிய உள்ளம் இன்றிக் குறுகிய மனோபாவம் வளரப் போகவே, சுரண்டுவோர் சுரண்டப்படுவோர், உடையவர் இல்லாதவர், ஆளுவோர் அடிமைகள் என்ற பேதங்கள் பலத்தன. இதற்கு விதி விதி' என்று சொல்லிக் கொண் டிருப்பதும் கடவுள்' என்ற கண்காணாத சந்